News Just In

3/25/2026 05:08:00 AM

யாழில் சுற்றுலா சென்றவர்களை தாக்கிய பொலிஸார் - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

யாழில் சுற்றுலா சென்றவர்களை தாக்கிய பொலிஸார் - மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!




பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைகுழுவின் யாழ்ப்பாண அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் இதனை தெரிவித்துள்ளார்.

பொலிஸார் மேற்கோண்ட தாக்குதலில் காயமடைந்த மூவரிடமும் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அதிகாரிகள் மந்திகை வைத்தியசாலையில் வைத்து இன்றையதினம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: