News Just In

3/14/2026 04:29:00 PM

மட்டக்களப்பு கடலில் கரையொதுங்கிய மர்மப்பொருள்; குவியும் பொதுமக்கள்

மட்டக்களப்பு கடலில் கரையொதுங்கிய மர்மப்பொருள்; குவியும் பொதுமக்கள்



மட்டக்களப்பு - காத்தான்குடி கடற்கரையில் நேற்று மாலை ஒரு பாரியளவிலான மர்மப்பொருள் கரையொதுங்கியுள்ளது என்று காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி. அழக்கோன் தெரிவித்தார்.

குறித்த மர்மப் பொருள் நேற்று மாலை கரையொதுங்கியுள்ளது .

சுமார் 25 அடி நீளமும்,4 ஆடி உயரமும் கொண்ட இம்மர்மப்பொருள் ரெஜிபோர்மினால் காணப்பட்டுள்ளது.

எனவே இது கப்பல் தரைதட்டும்போது அதன் பாதுகாப்பிற்கு பயன்படும் தடுப்பு ஆணையாக இருக்க வாய்ப்புள்ளதாக கூட இருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த மர்மப்பொருள் தொடர்பான விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

குறித்த மர்மப்பொருள் தொடர்ந்தும் காத்தான்குடி கடற்கரையில் காணப்படுவதோடு, இதனை பார்வையிட பொதுமக்கள் கூடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது

No comments: