.(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)
உலகளாவிய எரிபொருள் நெருக்கடி நிலைமையில் பாடசாலைகளில் தினசரி நிர்வாக மற்றும் கற்பித்தல்-கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக கல்வியமைச்சு சுற்று நிருபத்தின் மூலம் கல்வி நிருவாகத்தினருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
உலகளவில் உருவாகியுள்ள எரிபொருள் நெருக்கடியை முன்னிட்டு, ஆற்றல் பயன்பாட்டை சிக்கனமாக மேலாண்மை செய்து, பாடசாலைகளில் தினசரி நிர்வாகப் பணிகள் மற்றும் கற்பித்தல்-கற்றல் செயல்முறைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல கீழ்க்கண்ட வழிமுறைகளின்படி செயல்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரும் வரை, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பாடசாலை விடுமுறை நாளாகக் கருதப்படும். அந்த நாளில் மாணவர்கள் வீட்டிலிருந்தே சுயகற்றலில் ஈடுபடத் தேவையான பணிப்புகள், பயிற்சிகள், மீளாய்வுகள் ஆகியவற்றை உரிய முறையில் வழங்க அனைத்து அதிபர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாடத்திட்டத்தை முழுமையாகக் கற்பிக்க வேண்டிய காலம் குறைந்துள்ளதால், பாடசாலை நேரங்களில் பாடசாலை அல்லது வெளிப்புற அமைப்புகள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றிற்கு நேரத்தை ஒதுக்கக்கூடாது.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் எளிமையாக நடத்தப்பட வேண்டும். அதிக எரிபொருள் பயன்படுத்தப்படும் வாகன ஊர்வலங்கள் போன்றவை தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.
பாடசாலைக் கல்விச் சுற்றுலாப்பயணங்களை ஏற்பாடு செய்தல் அல்லது எதிர்காலத்தில் திட்டமிடப்பட்டுள்ள சுற்றுலாப்பயணங்களில் மாணவர்கள் பங்கேற்பது மறு அறிவித்தல் வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளின்படி செயல்பட்டு, இக்காலப்பகுதியில் பாடசாலைகளின் கற்பித்தல்-கற்றல் நடவடிக்கைகள் தடையின்றி நடைபெற கல்வி நிருவாகத்தினரின் ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்டுகிறது.
நிலைமை சீரடைந்த பின், பாடசாலைகளை வழக்கம்போல் நடத்துவதற்கான மேலதிக அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: