
தெஹ்ரானின் மையப்பகுதியில் தொடர் தாக்குதல்களை நிறைவு செய்துவிட்டோம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு அறிக்கையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF), "பரந்த அளவிலான" தாக்குதல்கள் என்று தாங்கள் அழைத்தவற்றில் ஈரானிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்ததாகக் கூறியுள்ளது.
இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஈரான் ஏவுகணைகளை அடையாளம் கண்டுள்ளதாகவும், அந்த அச்சுறுத்தலை இடைமறிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) முன்னதாகத் தெரிவித்திருந்தது.
No comments: