News Just In

3/06/2026 11:15:00 AM

யாழில் புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே விபத்திற்கு உள்ளான படகு - பலர் மூழ்கியதாக தகவல்

யாழில் புறப்பட்ட சிறிது நிமிடத்திலேயே விபத்திற்கு உள்ளான படகு - பலர் மூழ்கியதாக தகவல்



யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் பக்தர்களுடன் புறப்பட்ட படகு ஒன்று சென்ற சிறிது நிமிடத்திலேயே தலை கீழாக கவிழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகானது நாளையதினம்(07.03.2026) இடம்பெறவுள்ள பாலைதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்காக புறப்பட்டுச் சென்றவேளை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மூவர் கரைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் ஒருவர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையவர்களை மீட்கும் பணியில் கடற்றொழிலாளர்கள், படகோட்டிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: