News Just In

3/06/2026 11:12:00 AM

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு


நூருல் ஹுதா உமர்

கல்முனை: கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு (05) பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர்கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.பி. மசூத், பிராந்திய பிரிவுத் தலைவர்கள், பல்வேறு பிராந்திய சுகாதார நிறுவனங்களின் பொறுப்பு வைத்தியர்கள் மற்றும் பணிமனையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில், ரமலான் மாதத்தின் முக்கியத்துவம் மற்றும் நோன்பின் மகத்துவம் குறித்து அஷ்ஷெய்க் என்.ஜீ. அப்துல் கமால் (இஸ்லாஹி) அவர்களினால் விசேட மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

சுகாதாரத் துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடையே ஒற்றுமையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் நோக்கில் இவ்வாறான இப்தார் நிகழ்வுகள் பணிமனையினால் வருடா வருடம் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments: