News Just In

3/26/2026 06:40:00 AM

சிறப்புற நடந்தேறிய கனகர் கிராம பயனாளிகளுக்கான வீடுகள் கையளிக்கும் நிகழ்வு!

சிறப்புற நடந்தேறிய கனகர் கிராம பயனாளிகளுக்கான வீடுகள் கையளிக்கும் நிகழ்வு!



பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராமத்தில் இருந்து 1990 காலப்பகுதியில் விரட்டியடிக்கப்பட்டமக்கள் பல்வேறு போராட்டங்களின்பின்னர் 11/11/2023 அக்கிராமத்தில்குடியிருக்க 73குடும்பங்களுக்குமட்டுமே அனுமதி அளிக்கப்பட்டனர் .இடம்பெயர்ந்த இந்த மக்கள் மீள்குடியேற்றம் என்ற திட்டத்தில் குடியமர்த்தப்படாமல் காணிஅற்றவர்களுக்கு காணிவழங்கல் என்ற அடிப்படையிலே குடியமர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குடியமர அனுமதிக்கப்பட்டு ஆண்டுகள் இரண்டு கடந்தும்அக்கிராமத்தில் குடிநீர்வசதிகளோ நிலையான வீடுகளை அரசு அமைத்துகொடுக்கவில்லை.மக்களோ இத்தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நிதிவழமற்றுகாணப்பட்டனர்.


மேற்படி சூழ்நிலையில்  Drசதாசிவம் மகேஷ்வரன் நம்பிக்கை நிதியக் காப்பாளர்  திரு சதாசிவம் மங்களேஷ்வரன் அவர்களின் 12மில்லியன் அவர்களின்  நிதி பங்களிப்பு மற்றும்  அரசின்5.7 மில்லியன் நிதி பங்களிப்புடனுன்ஆறு நிலையான வீடுகள் அமைக்கப்பட்டது. கிழக்கு குமுகாயமேம்பாட்டு மன்ற (SAFE) தலைவர் சின்னத்துரை தேவசிங்கன் அவர்களின் வழிகாட்டுதலில்  வீடுகள்,  உள்வீதிகள் , குடிநீர்கிணறு,ஆழகுழாய் கிணறு மற்றும் நீரத்தாங்கி வசதிகளும் ஐக்கிய உலகத்தமிழர் தமிழியல் நடுவகம் ,அவுஸ்திரேலியமக்கள் நலன் காப்பகம் ஆகியவற்றின் நிதிப்பங்கிளிப்புடன்மேற்கொள்ளப்பட்டன.



இந்நிகழ்வினை சிறப்பிக்க அதிதிகளாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன் மட்டக்களப்ப பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஞானமுத்து சிறிநேசன்,கௌரவ இளையதம்பி சிறிநாத் பொத்துவில்பிரதேச சபை தவிசாளர்,ஆலையடிவேம்பு பிரதேச சபைத்தலைவர்,திருக்கோவில் பிரதேச சபைத்தலைவர் பிரதேச சபையின் அங்கத்தவர்கள் பிரதேசபிரமுகர்களுடன் மக்களும் கலந்துகொண்டனர்.


அமர
ர்   கலாநிதி சதாசிவம் மகேஷ்வரன் அவர்களின் ஞாபகார்த்தமாக பிரதான உள்வீதியொன்றுக்கு Drமகேஷ்வரன்வீதி என்ற பெயர் சூட்டப்பட்டுஅதற்கான பெயர் பலகையை பொத்துவில் பிரதேச சபையின்
கௌரவ தவிசாளர் S M M முசாரப் அவர்கள்திரைநீக்கம் செய்து வைத்தார்.

No comments: