மட்டக்களப்பு வவுனதீவு - கிணற்றில் குற்றுயிராக ஒரு பெண்ணும், இன்னொரு பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட விவகாரம் - காஞ்சிரங்குடா பகுதியை சேர்ந்த அண்ணன், தம்பி, அண்ணி என 3 பேர் கைது - வாகனங்களும் கொள்ளை இடப்பட்ட நகையும் மீட்பு
வவுனதீவு - கொத்தியாபுலை நெல்லிக்காட்டு வயல் பகுதி கிணற்றில் இருந்து குற்றுயிரான நிலையில் ஒரு பெண்ணும் இன்னுமோர் ஊருக்குலைந்த பெண்ணின் சடலமும் மீட்கப்பட்ட விவகாரத்தின் மர்மம் துளங்கியது - குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களான காஞ்சிரங்குடா பகுதியை சேர்ந்த ஒரே குடும்ப உறவுகளான 2 ஆண்களும் ஒரு பெண்ணும் நேற்று (21) இரவு கைது செய்யப்பட்ட அதேவேளை பெண் அணிந்து இருந்த தங்க நகை, முச்சக்கர வண்டியும், காரும் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய வந்தாருமூலை- களுவங்கேனி பிரதேசத்தில் ஆலயடி வீதி எனும் பகுதியில் வைத்து ஒரு ஆணையும் பெண்ணையும் சந்தேக நபர்களாக கைது செய்துள்ளதுடன் பெண்ணை பின்தொடரும் முச்சக்கர வண்டியும், மேலும் ஒரு காரும் அவர் அணிந்து இருந்த நகையும் மீட்கப்பட்டு உள்ளது.
Share auto வடிவில் சூட்சுமமான முறையில் பின்தொடரும் பெண்ணால் பெண் கூட்டிச் செல்லப்பட்டு மயக்கமருந்து கொடுத்து நகை பணம் என்பவற்றை கொள்ளையிட்ட பின் கிணற்றில் வீசும் முறையா என சந்தேகம் நிலவுகிறது.
குறித்த விடயம் தொடர்பில் சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் நிலையங்களின் ஒத்துழைப்புடன் மேலதிக விசாரணைகள் மாவட்ட புலனாய்வு பிரிவால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நகைகளுடன் பெண்கள் தனிமையில்- உதவிக்கு துணையாக வரும் இன்னுமொரு புதிய பெண், என்பவைகள் ஒவ்வொருவரும் சிந்திக்கவும் விழிப்புடன் பயணிப்பதும் அவசியமாகும்

No comments: