News Just In

3/17/2026 09:21:00 AM

விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு? - தவெக நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை

விரைவில் வெளியாகிறது முக்கிய அறிவிப்பு? - தவெக நிர்வாகிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை



 டெல்​லி​யில் இருந்து நேற்று சென்னை திரும்​பிய தவெக தலை​வர் விஜய், கட்​சி​யின் உயர்​மட்ட நிர்​வாகிளு​டன் தீவிர ஆலோ​சனை நடத்​தி​னார்.

தேஜ கூட்​ட​ணி​யில் தவெக இணை​யப்​போவ​தாக எழும் யூகங்​களுக்கு மத்​தி​யில் விஜய் விரை​வில் ஒரு முக்​கிய அறி​விப்பை வெளி​யிட உள்​ள​தாக​வும் தகவல்​கள் வெளி​யாகி​உள்ளன.

சமீபத்​தில் தவெக பொதுச்​செய​லா​ளர் ஆனந்த் நடத்​திய மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​துக்கு பிறகே கூட்​டணி குறித்த பரபரப்பு தொற்​றிக்​கொண்​டது. கூட்​டணி குறித்த தகவல்​கள் கசிந்​தது தொடர்​பாக, ஆனந்தை விஜய் கண்​டித்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதற்​குப் பின்​னணி​யில் ஆனந்த், ஆதவ் அர்​ஜுனா இடையி​லான அதி​காரப் போட்டி நில​வுவதே காரணம் என தெரி​கிறது.

இதற்​கிடை​யில், அமித்ஷா தரப்​பிலிருந்து கூட்​டணி அழைப்பு வந்​தா​லும், அதை தவிர்க்​கவே 90 இடங்​கள், இரண்​டரை ஆண்டு முதல்​வர் பதவி என்ற நிபந்​தனையை விஜய் விதித்​ததாக கூறப்படுகிறது.

சமீபத்​திய சிபிஐ விசா​ரணை​யின் போது அரசி​யல் அழுத்​தம் இன்​றி, கரூர் விவ​காரம் குறித்து மட்​டும் விசா​ரணை நடந்​த​தால் விஜய் உற்​சாக​மாக திரும்​பி​உள்​ளார்.

இந்​நிலை​யில் நேற்று இரவு ஆதவ் அர்ஜுனா அலு​வல​கத்​தில் நடந்த ஆலோ​சனை​யில் பங்​கேற்ற விஜய், நிர்​வாகி​களுக்கு இடையே நில​வும் மோதலைச் சமா​தானம் செய்​துள்​ளார்.

இதைத்​தொடர்ந்​து, தேர்​தல் வியூ​கம் மற்​றும் கூட்​டணி குறித்த அதி​காரப்​பூர்வ அறி​விப்பை அவர் வெளி​யிடு​வார் என எதிர்​பார்க்​கப்​படு​வ​தாக தவெக நிர்​வாகி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதற்​கிடையே தவெக இணை பொதுச் செய​லா​ளர் சிடிஆர். நிர்​மல் குமார் நேற்று தனது எக்ஸ் தள பதி​வில், ‘பாஜக -அதி​முக, ராம​தாஸ், சசிகலா ஆகியோரை தவெக​வுடன் தொடர்​புபடுத்தி கூட்​ட​ணிப் பேச்​சு​வார்த்​தை நடத்​தப்​படு​வ​தாக கூறப்​படு​வது முற்​றி​லும் உண்​மைக்​குப் புறம்​பானதாகும்.

குறிப்​பிட்ட கட்​சிகள் மற்​றும் அரசி​யல் தலை​வர்​களு​டன் எந்​த​ வித​மான பேச்​சு​வார்த்தை எந்த மட்​டத்திலும் நடை​பெற​வில்​லை.

பேச்​சு​வார்த்தை நடப்​ப​தாக கூறப்​படும் வதந்​தி​களை நம்ப வேண்​டாம். பொதுமக்​களிட​மும் தொண்​டர்​களிட​மும் குழப்​பத்தை விளை​விப்​ப​தற்​காக இத்​தகைய ஆதா​ரமற்ற செய்​தி​கள் திமுக​வின​ரால் பரப்​பப்​படு​கின்​றன’ என்று தெரி​வித்​துள்​ளார்​.

No comments: