ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் எதிர்ப்பு செயற்றிட்டத்தின் ஒரு பகுதியாக, “முழு நாடும் ஒன்றாக” தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
2026 மார்ச் 01 முதல் 07 வரை நடைபெறும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டிலும் சம்மாந்துறை பிரதேச சபையின் பங்குபற்றலுடனும், பொதுமக்களிடையே போதைப்பொருள் அபாயங்கள் தொடர்பான வலுவான விழிப்புணர்வு வேலைத்திட்டம் வியாழக்கிழமை (05) ஹிஜ்றா சந்தி பகுதியில் நடைபெற்றது.
இதன் போது “விற்கின்ற – அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்: அகன்று செல்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களிடம் விநியோகிக்கப்பட்டன.
மேலும், பொதுமக்களுக்கு போதைப்பொருளின் ஆபத்துகள் குறித்து விளக்கமளிக்கும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், வாகனங்களில் “போதை ஒழிப்பு” ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. அதேபோல், அரச அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் திரளும் இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எல்.எல்.எம். ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
No comments: