.jpg)
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப சற்றுமுன்னர் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில் எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அதன் புதிய விலை 281 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லங்கா சூப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 329 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேநேரம் 92 ஒக்ரேன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 293 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை 95 ஒக்ரேன் ஒரு லீற்றரின் விலை 340 ரூபாவாகவும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 182 ரூபாவாகவும் மாற்றமின்றி காணப்படுகிறது.
இதேவேளை மத்திய கிழக்கு நாட்டில் நிலவும் போர் பதற்றத்தால் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனக்கருதி நாடு முழுவதும் இன்று திடீரென எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: