News Just In

3/30/2026 04:11:00 PM

இலங்கையில் அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம்! மக்களுக்கு பேரிடி!

இலங்கையில் அதிரடியாக உயர்ந்த மின் கட்டணம்! மக்களுக்கு பேரிடி



2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, மின்சாரக் கட்டண திருத்தம் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு அமைய, 13.56% மின்சாரக் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும், தற்போதுள்ள நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு அலகுகளின் அடிப்படையில் பல்வேறு கட்டங்களின் கீழ் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது

அதன்படி 0 - 30 வரையான அலகுகளுக்கு 4.3 வீதம் மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றது.இதற்கமைய 15 ரூபாய் மாதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

31 முதல் 60 வரையான அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்படுகின்றது.
மாதாந்தம் 45 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.


61 - 91 அலகுகளுக்கு 6.9 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்த 120 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

91–180 அலகுகளுக்கு 7.2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் மாதாந்த 420 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

No comments: