News Just In

3/06/2026 11:23:00 AM

அமெரிக்க எண்​ணெய் கப்பலை தாக்​கிய​தாக ஈரான் ராணுவம் அறிவிப்பு ‘போர்க் கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடி’

அமெரிக்க எண்​ணெய் கப்பலை தாக்​கிய​தாக ஈரான் ராணுவம் அறிவிப்பு
‘போர்க் கப்பல் மீதான தாக்குதலுக்கு பதிலடி’




 ஈரான் போர்க் கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் தாக்​கியதற்கு பதிலடி​யாக, வளை​குடா பகு​தி​யில் அமெரிக்க எண்​ணெய் கப்​பல் மீது ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​ய​தாக ஈரான் கூறி​யுள்​ளது. ஈரான் கடற்​படை​யின் 17 போர் கப்​பலை அழித்​து​விட்​ட​தாக அமெரிக்கா கூறியது.

இந்​தி​யா​வில் கூட்​டுப் பயிற்​சியை முடித்து விட்டு ஈரான் திரும்​பிய ஐஆர்​ஐஎஸ் டேனா என்ற போர்க்​கப்​பலை, இந்​தி​யப் பெருங்​கடல் பகு​தி​யில் அமெரிக்க கடற்​படை​யின் நீர்​மூழ்கி கப்​பல் மார்க்​-48 என்ற சக்​தி​வாய்ந்த டார்​பிடோ குண்டு மூலம் நேற்று முன்​தினம் தகர்த்​தது. இதில் 87 வீரர்​கள் உயி​ரிழந்​தனர். 32 வீரர்​களை இலங்கை கடற்​படை மீட்​டது. மாய​மான 60-க்​கும் மேற்​பட்​டோரை தேடும் பணி​யில் இலங்கை அரசு ஈடு​பட்​டுள்​ளது.

இதுகுறித்து கருத்து தெரி​வித்த ஈரான் வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் அப்​பாஸ் அராக்​சி, “ஈரான் கடல் பகு​தி​யில் இருந்து 2,000 மைல்​களுக்கு அப்​பால் ஈரான் கப்​பல் மீது தாக்​குதல் நடத்தி அமெரிக்கா அராஜகத்​தில் ஈடு​பட்​டுள்​ளது. இந்​திய கடற்​படை நிகழ்ச்​சி​யில் பங்​கேற்​று​விட்டு திரும்​பிய டேனா போர்க்​கப்​பல் மீது எச்​சரிக்கை எது​வும் விடுக்​கப்​ப​டா​மல் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளது. இதற்​காக அமெரிக்கா மிகுந்த வருத்​தம் அடை​யும்” என்​றார்.

இலங்கை அருகே ஈரான் போர்க்​கப்​பல் தாக்​கப்​பட்ட சில மணி நேரத்​தில், வடக்கு பெர்​சி​யன் வளை​கு​டா​வில் அமெரிக்க எண்​ணெய் டேங்​கர் கப்​பல் மீது ஈரான் ராணுவம் ஏவு​கணை தாக்​குல் நடத்​தி​ய​தாக​வும், இதில் அந்​தக் கப்​பல் தீப்​பிடித்து எரிவ​தாக​வும் ஈரான் கூறி​யுள்​ளது. இது இன்​னும் உறுதி செய்​யப்​பட​வில்​லை.

ஹார்​முஸ் ஜலசந்தி பகுதி முழு​வதும் எங்​கள் கட்​டுப்​பாட்​டில்​தான் உள்​ளது என ஈரான் தெரி​வித்​துள்​ளது. இலங்​கை​யில் 2-வது கப்​பல் ஈரான் கடற்​படை​யின் டேனா போர்க் கப்​பலை, அமெரிக்க நீர்​மூழ்கி கப்​பல் தாக்​குதல் நடத்தி மூழ்​கடித்​த​தால், அப்​பகு​தி​யில் சென்று கொண்​டிருந்த மற்​றொரு ஈரான் கடற்​படை கப்​பல் இலங்கை நோக்கி சென்று கொண்​டிருக்​கிறது.

இந்​தக் கப்​பல் மீதும் அமெரிக்க கடற்​படை தாக்​குதல் நடத்​தலாம் என்​ப​தால், அந்த கப்​பல் இலங்கை நோக்கி செல்​கிறது. இதில் ஈரான் கடற்​படை வீரர்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இந்த கப்​பல் பாது​காப்பு காரணங்​களுக்​காக இலங்கை கடற்​பகு​திக்​குள் நுழைய அனு​மதி கேட்​டுள்​ள​தாக இலங்​கை தரப்​பில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: