News Just In

3/12/2026 03:18:00 PM

99ஐப் பூர்த்தி செய்தமைக்கு கௌரவித்து நினைவுப் பரிசு

99ஐப் பூர்த்தி செய்தமைக்கு கௌரவித்து நினைவுப் பரிசு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

99வயதைப் பூர்த்தி செய்து நூறாவதில் தடம் பதிக்கத் துவங்கியிருக்கும் மூதாட்டியைக் கௌரவித்து நினைவுப் பரிசு வழங்கி வைக்கப்பட்டதாக (CIRCLE) சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வாழைச்சேனை மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பசீர் வீதி, மாவடிச்சேனையில் வசித்து வரும் கலந்தர்லெப்பை சாலிஹா உம்மாவின் இல்லத்திற்கு நினைவுப் பரிசுகளுடன் சென்ற பிரதேச உதவிச் செயலாளர் அபூசாலி ஜுமானா ஹஸீன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் டபிள்யூ.ரீ. அர்சியா, முதியோர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச். சுல்பியா ஆகியோர் மூதாட்டியிடம் நலன் விசாரித்து விட்டு நினைவுப் பரிசுகளை வழங்கி மூதாட்டியைக் கௌரவித்தனர்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் நிதி அனுசரணையில் மகளிரைக் கௌரவிக்கும் நிகழ்வாக இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நவீன தேசிய ஆளடையாள அட்டையைக் கொண்டிருக்கும் மூதாட்டி சாலிஹா உம்மா 1927.02.07 அன்று பிறந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூதாட்டி சாலிஹா உம்மாவுக்கு 10 பிள்ளைகள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் தெரியவருகிறது

No comments: