
மேற்காசிய நாடான ஈரானுடன் அமெரிக்காவும் இஸ்ரேலும் போரிட்டு வருகின்றன. இதனால் உலக நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடிக்கு தீர்வு காண அமெரிக்கா தனது கடற்படையை வளைகுடா நோக்கி அனுப்பியுள்ளது. இதில் சுமார் 4,500 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் ஈரானுடன் புதிய ராஜதந்திர முயற்சியை அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரிசீலித்து வரும் நிலையில், அவருக்குக் கூடுதல் ராணுவ வாய்ப்புகளை வழங்கும் விதமாக, அமெரிக்க ராணுவத்தின் 82-வது விமானப் படையை சேர்ந்த சுமார் 2,000 வீரர்களை மேற்கு ஆசியா செல்லுமாறு பென்டகன் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் 18 மணி நேரத்துக்குள் உலகின் எந்தப் பகுதிக்கும் செல்லக்கூடிய திறன் கொண்ட, சுமார் 3,000 வீரர்களை கொண்ட ஒரு படைப்பிரிவில் இடம்பெற்றுள்ள வீரர்கள் ஆவர்.
No comments: