அக்கரைப்பற்றில் விழாக்காணும் சுதந்திர தினம் – வெகுவிமர்சையாக ஏற்பாடுகள்
சுதந்திர தினத்தை மிகவும் விமர்சையாகக் கொண்டாடும் ஊர்களில் அக்கரைப்பற்று தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய வைபவம் போன்று சுதந்திர தின நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி நடைமுறைப்படுத்துவது அக்கரைப்பற்றின் சிறப்பான பாரம்பரியமாக இருந்து வருகின்றது.
எனினும், அரசியல் இழுபறிகள் காரணமாக கடந்த ஆண்டு தேசிய சுதந்திர தின வைபவங்கள் அக்கரைப்பற்றில் நடைபெறாத நிலை காணப்பட்டது. இதனால் மக்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வாண்டு முன்னாள் அமைச்சர் மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்களின் தலைமையில், சுதந்திர தினத்தை வெகுவிமர்சையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள், மாணவர்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்ட பல தரப்பினரின் பங்களிப்புடன், தேசிய ஒற்றுமை மற்றும் சுதந்திரத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் இவ்வாண்டு நிகழ்வுகள் சிறப்பாக அமையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்
No comments: