News Just In

2/24/2026 08:09:00 AM

நோன்பு காலத்தில் ஹோட்டல்களில் விசேட சுகாதார பரிசோதனை

நோன்பு காலத்தில் ஹோட்டல்களில் விசேட சுகாதார பரிசோதனை


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நோன்பு காலத்தை முன்னிட்டு ஹோட்டல்களில் விசேட சுகாதார பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

இந்த பரிசோதனைகளில் உணவுப் பொருட்களின் தரம், சேமிப்பு முறைகள், சுற்றுப்புறத் தூய்மை மற்றும் பணியாளர்களின் தனிநபர் சுகாதாரம் ஆகியவை விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.

மேலும், உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பாக சேமித்து விற்பனை செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக ஹோட்டல் நிர்வாகிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

சுகாதார பாதுகாப்பும், பொதுமக்களின் நலனும் முன்னிலையில், இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: