சிரேஷ்ட ஒளிபரப்பாளர்A.L இர்பான் அவர்களின் தந்தை புத்தளத்தில் கொலை
நேற்று இரவு முச்சக்கர வண்டியில் சென்றவர் இன்று காலை சடலமாக மீட்பு.
புத்தளம், தில்லையடி -ரத்மல்யாய, 4ம் குறுக்குத்தெருவில், வசித்து வந்த ஆதம் பாவா அப்துல் லதீப் என்பவரே இனம் தெரியாதோரால் கொலை சொய்யப்பட்ட நிலையில் நேற்று (22/02/206 ) காலை சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்றுமுன் தினம் (21.02.2026) இரவு 9.00 மணியளவில் தனது YB 6811 இலக்க சிவப்பு நிற முச்சக்கர வண்டியில் சென்றவர், நேற்றுமுன் தினம் இரவிலிருந்து காணவில்லை.
அவரது உறவினர்களால் நேற்றுமுன் தினம் இரவு முதல் தேடப்பட்ட நிலையில்
நேற்று (22/02) காலை தில்லையடி, ரத்மல்யாய - அல்காசிமி சிட்டி( 600 வீட்டுத்திட்ட) பிரதான வீதியினூடாககல்லடி நோக்கிச்செல்லும் உள்வீதியின் தோட்டப்பகுதிக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
2/23/2026 06:31:00 AM
சிரேஷ்ட ஒளிபரப்பாளர் A.L இர்பான் அவர்களின் தந்தை புத்தளத்தில் கொலை !
Subscribe to:
Post Comments (Atom)
No comments: