News Just In

2/24/2026 08:12:00 AM

நாமலுக்கு எதிராக 2000ற்கும் அதிகமான மின்னஞ்சல்கள்! தமிழ் மக்களுடன் இணைந்துள்ள சிங்கள மக்கள்

நாமலுக்கு எதிராக 2000ற்கும் அதிகமான மின்னஞ்சல்கள்! தமிழ் மக்களுடன் இணைந்துள்ள சிங்கள மக்கள்




நாமல் ராஜபக்ச பற்றிய கருத்துக்களும் விமர்சனங்களும் தான் தற்போது சமூக வலைத்தளங்கள் முதல் எல்லா இடங்களிலும் பேசப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அவருக்கு ஆதரவாகவும் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு எதிராகவும் சில ராஜபக்ச ஆதரவாளர்கள் தங்களுடைய கருத்துக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஆனால் தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள் மக்களும் நாமல் ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை முக்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது.

நாட்டை வங்ரோத்து நிலையை அடைய செய்தவர்கள், மற்றும் யுத்தத்தை காரணம் காட்டி மக்களை ஏமாற்றியவர்கள் ராஜபக்சர்கள் என்று அவர்கள் பதிவிடுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

இந்த நிகழ்வை நடத்த வேண்டாம் என்று ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன்களுக்கு 2000ற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் வந்துள்ளதாக மிலிந்த ராஜபக்ச என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இந்த நிகழ்வை நடத்துமாறு ஒரு மின்னஞ்சலும் வரவில்லை, அவ்வாறு வந்திருந்தால் மறுபரிசீலனை செய்து பார்த்திருப்பார்கள்.

No comments: