
கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது, ரணசிங்க ஆராச்சிகே சங்க ஷிரந்த எனப்படும் புளூமெண்டல் சங்க என்பவரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலானது, நேற்று முன்தினம் இரவு (14) நடத்தப்பட்டது.
ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியில் நடத்தப்பட்ட இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் நால்வர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் டி56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிகையலங்கார நிலையம் ஒன்றை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
உயிரிழந்த இளைஞர், பழனி ரிமோஷன் மற்றும் பழனி ஷிரான் ஆகியோரின் தரப்பைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கொழும்பு-12, பசார் வீதியில் கைவிடப்பட்டுச் சென்றிருந்த நிலையில், பொலிஸார் அதனை மீட்டுள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத் தகடுகள் போலியானவை என்பதும் விசாரணையில் வெளியாகியுள்ளது.
No comments: