News Just In

2/04/2026 05:47:00 PM

காரைதீவு பிரதேச சபையில் சுதந்திர தின நிகழ்வு!

காரைதீவு பிரதேச சபையில் சுதந்திர தின நிகழ்வு!



நூருல் ஹுதா உமர்

காரைதீவு பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் 78வது தேசிய சுதந்திர தின விழா இன்று (4) காரைதீவு சபை வளாகத்தில் உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உப தவிசாளர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, விசேட உரையையும் நிகழ்த்தினார். அத்துடன் நாட்டுக்காக உயிர் நீத்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் பஸ் நிலையம், சுவாமி விபுலானந்தர் சுற்றுவட்டம் போன்ற பிரதேசங்களில் சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
இவ்விழாவில், பிரதித் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள், சபை செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments: