News Just In

2/04/2026 05:57:00 PM

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் நடைபெற்ற இலங்கையின் 78 ஆவது சுதந்திர நிகழ்வு...!!!

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் நடைபெற்ற இலங்கையின் 78 ஆவது சுதந்திர நிகழ்வு...!!!



நூருல் ஹுதா உமர்
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எச். பௌஸ் அவர்களின் நெறிப்படுத்தலில் அவரின் தலைமையில் இன்று (04) நடைபெற்றது.

இலங்கையின் சுதந்திரத்திற்கு முஸ்லிம்களின் பங்களிப்பு அளப்பரியது என 78 ஆவது சுதந்திர தின உரையில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்ஷேய்க்ஏ.எம்.ரஹ்மத்துல்லாஹ் தெரிவித்தார்.
சுதந்திர தின நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், வலய கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்கள் உத்தியோகத்தர்கள் பணியாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

No comments: