சம்மாந்துறை பிரதேச சபையின் சனசமூக நிலையங்கள் இணைந்து ஏற்பாடு செய்த 78 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வழிகாட்டலில் முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் அப்துல் மஜீட் ஞாபகார்த்த ஜனாஸா மண்டப வளாகத்தில் இன்று (04) இடம்பெற்றது.
தேசியக்கொடி ஏற்றி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் நினைவு கூறப்பட்டதுடன், நாட்டு மக்கள் அனைவரும் சமாதானமும் சௌபாக்கியத்துடன் வாழ வேண்டி விசேட துஆப் பிரார்த்தனை மற்றும் மையவாடி வளாகம் கனரக வாகனங்களின் உதவியுடன் மரங்கள் மற்றும் பற்றைக்காடுகள், புல் பூண்டுகள் வெட்டப்பட்டு துப்புரவு செய்யப்பட்டது.
இதில் சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் வீ.வினோ காந், சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், சனசமூக நிலையங்களின் பிரதிநிகள், சமூக மட்ட பிரதிநிதிகள், நம்பிக்கையாளர் சபை நிர்வாகிகள், முஹல்லா மஹல்லா பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊழியர்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments: