நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஜலால் மகா வித்தியாலயத்தின் அதிபராக அதிபர் தரம் ஒன்றை சேர்ந்த எம்.எம்.ஹிர்பகான் இன்று (12) கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிபர் சேவை இடமாற்ற பட்டியல் மற்றும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரின் கடிதத்திற்கு அமைய, சாய்ந்தமருது கோட்டக்கல்வி பணிப்பாளர் திருமதி அஸ்மா ஏ மலிக், அல்- ஜலால் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் எம்.ஏ.சிராஜ் மற்றும் உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முன்னிலையில் பாடசாலை கடமைகளை அதிபர், எம்.எம்.ஹிர்பகான் பொறுப்பேற்றுக் கொண்டார்.
எம்.எம்.ஹிர்பகான், இதற்கு முன்னர் மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் அபதிபராக கடமையாற்றியதுடன், மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி, ஷம்ஸ் மத்திய கல்லூரி ஆகியவற்றில் அதிபராகவும், பிரதி அதிபராகவும் நீண்ட காலமாக சேவையாற்றியுள்ளதுடன். 1994ம் ஆண்டு முதல் ஆசிரியர் நியமனம் பெற்று அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் கடமையாற்றியதுடன் பின்னர் ஒலுவில் அல்-ஹம்றா வித்தியாலயத்திலும் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.
2008ம் ஆண்டு அதிபர் பரீட்சையில் சித்தியடைந்து 18 ஆண்டுகள் அதிபர் சேவையில் பணியாற்றி வரும் ஒரு சிரேஷ்ட அதிபராவார். ஆசிரியராக இருந்த காலப்பகுதியில் "லொஜிக் ஹிர்பகான்" என பெயர் பெற்ற இவர், மருதமுனையின் அல்-மனார், ஷம்ஸ் ஆகிய இரு பாடசாலைகளிலும் பொறுப்பதிபராக இருந்த பெருமை இவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது
No comments: