யாழ்ப்பாணம் பலாலியில் ஜனாதிபதி சுதந்திரமாக நடந்து திரிய முடியுமென்றால் நாட்டில் பயங்கரவாதம் எதற்கு? இவ்வாறு யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 25ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு, பல்கலைக்கழக பொங்குதமிழ் பிரகடன தூபியில் இன்று உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
அதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் பலாலியில் இன்று ஜனாதிபதி நடமாடுகின்ற வேளையில் அதே பயங்கரவாதத்தடைச்சட்டம் அமுல்படுத்தப்படுத்தப்படுகின்றது.
பா துகாப்பாக வட கிழக்கு மாகாணம் உணரப்படுகின்றது என்றால் இந்தப் பயங்கரவாதத்தடைச்சட்டம் எதற்கு?
ஜனநாயக ரீதியில் போராடுகின்ற ஜனநாயக ரீதியில் குரல் எழுப்புகின்ற தமிழ் அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், தமிழ் இளைஞர்கள் அனைவரையும் பாதிப்பதற்கா பயங்கரவாததடைச்சட்டம்
இந்த நிலையில் தமிழ் மக்களை முழுநாடுமே ஒன்றான வாருங்கள் என்று கேட்பதற்கு எப்படி உங்களுக்கு மனசு வருகின்றது என்றவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
No comments: