News Just In

1/27/2026 08:59:00 PM

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் !

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் !



நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி. எம். எம். அன்சார் அவர்களின் ஏற்பாட்டில், அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா அவர்களின் தலைமையில் இன்று (27.01.2026) அக்கரைப்பற்று பிரதேச செயலகக் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதேச அபிவிருத்தித் திட்டங்கள், பொதுமக்களின் அடிப்படை தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் நிர்வாகச் சவால்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம். எஸ். உதுமாலெப்பை, எம். எஸ். அப்துல் வாசித், அக்கரைப்பற்று மாநகர சபையின் முதல்வரும் முன்னாள் அமைச்சருமான ஏ. எல். எம். அதாஉல்லாஹ், அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம். ஏ. ராசீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், அக்கரைப்பற்று உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ. எம். தமீம், திணைக்களத் தலைவர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், அக்கரைப்பற்று பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

No comments: