சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் சில்லறை வியாபார நிலையங்கள் இன்று (27.01.2026) விசேட சுகாதார பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இந்த பரிசோதனைகள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டன.
பரிசோதனையின் போது உணவுப் பாதுகாப்பு, சுகாதார நடைமுறைகள், சுற்றுப்புற தூய்மை மற்றும் நுளம்பு வளர்ச்சி ஏற்படக்கூடிய சூழல்கள் உள்ளிட்ட அம்சங்கள் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்நடவடிக்கையின் போது கண்டறியப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய உரிய கால அவகாசம் வழங்கப்பட்டதுடன், வியாபார நிலைய உரிமையாளர்களுக்கு சுகாதார விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.
பொதுமக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்ய இத்தகைய பரிசோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments: