News Just In

1/23/2026 05:47:00 PM

சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையில் மூன்று குட்டிகளை ஈன்றது அரியவகை இலங்கை சிறுத்தை

சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலையில் மூன்று குட்டிகளை ஈன்றது அரியவகை இலங்கை சிறுத்தை



புத்தாண்டு அன்று சிங்கப்பூரின் மண்டாய் மிருகக்காட்சிசாலையில் அரியவகை இலங்கை சிறுத்தை மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.

1997-ஆம் ஆண்டிற்குப் பின்னர், அதாவது சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கு சிறுத்தை குட்டிகள் பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வரவின் மூலம் மண்டாய் காப்பகத்தில் உள்ள இலங்கைச் சிறுத்தைகளின் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.

தற்போது குட்டிகளும் அவற்றின் தாயும் பாதுகாப்பான தனி அறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், மிருகக்காட்சிசாலையில் 'லைவ் கமரா' (Live Cam) மூலம் பொதுமக்கள் இவற்றை நேரலையில் காணலாம்.

காடுகளில் தற்போது 800-க்கும் குறைவான இலங்கைச் சிறுத்தைகளே வசிக்கின்றன. இவை பெரும்பாலும் அவற்றின் தோலுக்காக வேட்டையாடப்படுவதால் அழியும் நிலையை எட்டியுள்ளன.

சிறுத்தைகளைத் தொடர்ந்து, மண்டாய் மிருகக்காட்சிசாலையில் உலகின் மிகப்பெரிய எலி இனமான காபிபாரா (Capybara) குட்டிகள் இரண்டும் பிறந்துள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் இங்கு காபிபாரா குட்டிகள் பிறப்பது இதுவே முதல்முறையாகும்.

No comments: