கல்முனை கமு/கமு/ அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற வித்தியாரம்ப விழாவின் போது, புதிதாக தரம் ஒன்று மாணவர்கள் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்கப்பட்டனர்.
பாடசாலை அதிபர் எஸ்.எம்.எஸ். றிஸானா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கல்விப் பயணம் சிறப்பாகவும் ஒழுக்கமுடனும் அமைய வேண்டும் என்ற நோக்கில், ஆசிரியர்களினால் வாழ்த்துரைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், இப்பாடசாலைக்கான கல்முனை வலயக்கல்வி அலுவலக இணைப்பாளர் தலில் அபூபக்கர், பிரதி அதிபர் திருமதி ஏ.பி. நஸ்ரின் ஜஸீல், உதவி அதிபர் எம்.எச்.ஐ. இஸ்ஸத், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு, மாணவர்களை உற்சாகப்படுத்தினர். சிறுவர் நட்பு சூழலில் கல்வியை ஆரம்பிக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
No comments: