News Just In

1/19/2026 11:38:00 AM

டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்?

டிரம்பை நம்பி ஏமாந்த ஈரான் போராட்டக்காரர்கள்: அமெரிக்கா நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டது ஏன்?



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை நம்பி ஏமாந்து விட்டதாக ஈரான் போராட்டக்காரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஈரானில் வெடித்த போராட்டம்

ஈரானில் நிலவி வரும் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஆகியவற்றிக்கு எதிராகவும், ஈரான் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் அந்த நாட்டில் கடந்த சில நாட்களாக பெரும் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தின் போது ஆர்பாட்டக்காரர்களுக்கும், ஈரான் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் கிட்டத்தட்ட 5000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஈரான் மக்களின் போராட்டத்திற்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரவு வழங்குவதாக தெரிவித்ததோடு, விரைவில் போராட்டக்காரர்களுக்கான உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து போராட்டம் தீவிரமடைந்தது, ஆனால் தங்கள் நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையீட்டால், ஈரானுக்கு அருகில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அரசு எச்சரித்தது.

ஈரான் அரசின் எச்சரிக்கை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

அதில், ஈரான் அதிகாரிகள் தாக்குதலையும், கொலைகளையும் நிறுத்திக் கொள்வதாக உறுதியளித்து இருப்பதாகவும், அமெரிக்கா எந்தவொரு இராணுவ நடவடிக்கையும் எடுக்காது என்றும் டிரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.

டிரம்பின் இந்த திடீர் மாற்றத்தால் ஈரான் போராட்டக்காரர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

டிரம்பின் வார்த்தைகளை நம்பியே வீதிகளில் இறங்கி போராடிய நிலையில் பலர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பே பறிப்போன 5000 பேரின் உயிருக்கு பொறுப்பு என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தெஹ்ரான் தொழிலதிபர் ஒருவர், டிரம்ப் எங்களை பகடைக்காயாக பயன்படுத்தி விட்டு தற்போது நடுவழியில் விட்டுவிட்டார் என வேதனை தெரிவித்துள்ளார்.

No comments: