News Just In

12/22/2025 05:57:00 PM

வேலன் சுவாமிகளின் கைது மிலேச்சத்தனமானது - சைவ மகா சபை மற்றும் தென் கயிலை ஆதீனம் கண்டனம் !

வேலன் சுவாமிகளின் கைது மிலேச்சத்தனமானது - சைவ மகா சபை மற்றும் தென் கயிலை ஆதீனம் கண்டனம் !




தையிட்டி சட்டபூர்வமற்ற விகாரை விவகாரத்திற்காக சாத்வீகமான முறையில் போராட்டம் நடைபெற்ற போது சைவ சமயத்தலைவர்களில் ஒருவரான நல்லூர் சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள் மிக மிலேச்சுதமான முறையில் கைது செய்யப்பட்டதை சைவ மகா சபை மற்றும் தென் கயிலை ஆதீனம் வன்மையாக கண்டிக்கின்றது.

குறித்த விடயம் தொடர்பாக தெரிவித்தாவது,

வணக்கத்துக்குரிய மதத்துறவி மீது மிக மோசமான நடத்தையை காவல்துறையினர் காண்பித்தமை மிகவும் அநாகரிகமான அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்யும் இந்த நாட்டின் சைவ சமயத்தவர் அனைவரையும் புண்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது

இலங்கையில் உள்ள அனைத்து மதத்தலைவரைகளையும் சமனாக மதிக்க வேண்டிய காவல்துறை ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதும் இந்த மண்ணின் மைந்தர்களான மதத்ததலைவர்களை மிலேச்சதனமாக நாடாத்துவதும் உண்மையை நேசிக்கும் அனைவராலும் ஜீரணிக்க முடியாத செயலாகும்

சட்டத்தை நிலைநாட்ட வேண்டியவர்கள் ஒரே தலைபட்சமாக சட்டரீதியற்ற முறையில் தனியார் காணியில் அடாத்தாக நிறுவப்பட்டுள்ள ஒரு மதக்கட்டிடத்திற்காக அதனை எதிர்த்து போராடிய சைவசமயத்துறவியை மிலேச்சுதனமாக தள்ளிச் சென்று வாகனத்தில் ஏற்றி கைது செய்தமை எமது சைவ சமயத்தை ஒரு பொருட்டாக மதிக்காது அவமதித்த செயலாகவே கருதவேண்டியுள்ளது

இந்த விடயத்தில் ஜனாதிபதியும் மதவிவகார மற்றும் சட்டம் ஒழுங்கு அமைச்சரும் உடனடியாக பக்கச்சார்பற்ற விசாரணை உததரவிட்டு முன்னடுத்து சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை வேண்டும்

எதிர்காலத்தில் இவ்வாறான எமது சமயத்தலைவர்களை அவமதிக்கும் செயலை முற்றுமுழுதாக நிறுத்துவதற்கு ஒரு மேற்கொள்ளும் உறுதியான நடவடிக்கைகள் வழிசெய்ய வேண்டும் என கோருவதுடன் இன மதங்களிடையே அதன் மூலம் மாத்திரமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றோம் என

குறித்த சம்பவத்தினை வன்மையாக கண்டித்தனர்.

No comments: