துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் நவ.20 - 26

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை- ராசியில் புதன், சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு(வ) - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம். அடிக்கடி வெளியூர் பயணங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான தடைகள் அகலும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. மேலதிகாரிகள் மூலமாக இருந்து வந்த அழுத்தம் அகலும். பெண்களுக்கு எதிர்ப்புகள் விலகும்.
அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாக நன்மைகள் ஏற்படும். கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரியமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தடையின்றி வெற்றியினைப் பெறுவீர்கள். உடல்நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் எந்தக் காரியத்திலும் எளிதாக ஈடுபட முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும்.
சுவாதி: இந்த வாரம் உற்றார்-உறவினர்களின் வருகை மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதல்கள் மாணவர்களை ஊக்கத்தை ஏற்படுத்தும். சிலருக்கு வீடு, மனை வாங்கும் கனவுகளும் நனவாகும். கடன்கள் அனைத்தும் குறையும்.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் கொடுக்கல்-வாங்கலிலும் எதிர்பார்த்த லாபம் அமையும். பெரிய மனிதர்களின் நட்பு அனுகூலப்பலனை உண்டாக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பணம் பலவழிகளில் தேடி வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பண வரத்து கூடும்.
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை- ராசியில் சூரியன், செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சனி, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு(வ) - தொழில் ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும். வழக்கு விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும்.
பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவது நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். கலைத்துறையினருக்கு உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்களில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புதிய பொருட்சேர்க்கைகளும், ஆடை ஆபரணமும் சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். தொழில், வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபங்கள் கிட்டும். தினமும் விநாயகரை வழிபடுவது உத்தமம்.
அனுஷம்: இந்த வாரம் எதிர்பார்த்த கடனுதவிகள் தடையின்றிக் கிடைப்பதால் தொழிலில் நல்ல அபிவிருத்தி பெருகும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் லாபம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும்.
கேட்டை: இந்த வாரம் கணவன்-மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார்-உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பண வரவுகள் தாராளமாக அமைவதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக் கவலை நீங்கும்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை- தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு(வ) - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் புதன், சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் - என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் மெதுவாக இருந்த பண வரத்து அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க இருந்த தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும்.
வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் நண்பர்கள் அனுசரனையுடன் இருப்பார்கள். தொழில் வியாபாரம் வேகமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
மேலிடத்திலிருந்து ஒரு இனிப்பான செய்தியைப் பெறுவீர்கள். பெண்களுக்கு பணவரத்து அதிகமாகும். அரசியல் வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.
மூலம்: இந்த வாரம் சிலருக்கு மனதில் நினைத்தவரையே கைப்பிடிக்கும் யோகம் உண்டாகும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். கொடுக்கல்-வாங்கல் சரளமான நிலையில் நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றிக்கனியினைப் பறிப்பார்கள்.
பூராடம்: இந்த வாரம் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சனிக்குரிய பரிகாரங்களைத் தொடர்ந்து செய்வது நல்லது.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் பொருளாதார ரீதியாக முன்னேற்றமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத திடீர் தன சேர்க்கைகளும் கிடைக்கப்பெறும். குடும்பத்திலிருந்த கருத்து வேறுபாடுகள் விலகி கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்த உறவினர்களும் தேடிவந்து ஒற்றுமை பாராட்டுவார்கள்.
No comments: