News Just In

11/21/2025 05:47:00 PM

நேபாளத்தில் மீண்டும் போராட்டம்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு

நேபாளத்தில் மீண்டும் போராட்டம்: ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு



 நேபாளத்​தில் சமூக வலை​தளங்​களுக்கு விதிக்​கப்​பட்ட கட்​டுப்​பாடு​களை எதிர்த்து ஜென்​-ஸீ இளைஞர்​கள் கடந்த செப்​டம்​பரில் வீதி​யில் இறங்கி போ​ராட்​டங்​களை நடத்​தினர். பின்​னர் இந்த போ​ராட்​டம் வேலை​யின்மை மற்​றும் ஊழலுக்கு எதி​ராக திரும்​பியது.

இளைஞர்​களின் போ​ராட்​டத்தை எதிர்​கொள்ள இயலாமல் நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். இதையடுத்​து, நேபாளத்​தின் இடைக்​கால அரசு முன்​னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி தலை​மை​யில் அமைக்​கப்​பட்​டது.

கடந்த இரண்டு மாதங்​களாக அமைதி திரும்​பிய நிலை​யில், கடந்த இரு நாட்​களாக ஜென்​-ஸீ இளைஞர்​களுக்​கும், சர்மா ஒலி ஆதர​வாளர்​களுக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டுள்​ளது. சில இடங்​களில் வன்​முறை சம்​பவங்​களும் நிகழ்ந்​துள்​ளன. இதையடுத்​து, பதற்​றத்தை கட்​டுப்​படுத்த பாரா, சிமாரா பகு​தி​களில் இரண்​டாவது நாளாக மதி​யம் 1 மணியி​லிருந்து இரவு 8 மணி வரை ஊரடங்கு உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது.

இடைக்​கால அரசின் பிரதமர் சுஷிலா கார்க்கி கூறுகை​யில், “மார்ச் 25, 2026-ல் தேர்​தல் அறிவிக்​கப்​பட்​டுள்​ள​தால் ஜனநாயக நடை​முறை​கள் மீது இளைஞர்​கள் நம்​பிக்கை வைக்க வேண்​டும். நாட்டை நிர்​வாகம் செய்ய புதிய தலை​முறை​யினரிடம் ஆட்சியை ஒப்படைக்க விரும்புகிறோம்'' என்றார்.


No comments: