திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தற்போது பேசுபொருளாகவுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சமூகவலைத்தளங்களில் வெளியான சில புகைப்படங்கள் மேலும் இந்த விடயத்தை பூதாகரமாக்கியுள்ளது.
இந்த புத்தர்சிலை விவகாரத்தில் 21ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நடைபெறவுள்ள பேரணிக்கான சதிதிட்டம் உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தின் போது ஒரு பௌத்த துறவி பொலிஸாரை அறைந்த காணொளியொன்று வெளியானது, இந்தநிலையில் குறித்த பௌத்த துறவி வைத்தியசாலையில் அனுமதி பெற்றுள்ளதுடன், அவருக்காக நாமல் ராஜபக்ச தரப்பினர் பேசிவருகின்றனர்.
இந்தநிலையில் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வெளியிட்ட காணொளியில், நாங்கள் ராஜபக்ச அணியினர், ராஜபக்ச பீடத்தை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றார்.
ராஜபக்சர்களுக்காகவே காவியுடை அணிந்தவர்கள் என்று குறிப்பிடுகின்றார். அதன் மூலம் இவர்களின் நிலைபாட்டை அறிந்துக்கொள்ள முடிகின்றது.
No comments: