News Just In

10/30/2025 01:03:00 PM

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் கௌரவிப்பு

கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியில் கௌரவிப்பு

நூருல் ஹுதா உமர்
கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியின் 125 ம் ஆண்டை வெகு சிறப்பாக நடாத்துவதற்கு க்கு ஒரு வருட காலமாக பூரண ஒத்துழைப்பு வழங்கிய கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் பாடசாலை சமூகத்தினரால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

மேலும் புலமைப்பரிசில் பரீட்சையில் மீள் பரிசீலனை மூலம் சித்தியடைந்த வினோதராஜ் அரனன் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு கடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் 78 மாணவர்கள் சித்தியடைந்ததுடன் இவ் மாணவனுடன் 79 மாணவர்களாக அதிகரித்தமை குறிப்பிட்டத்தக்கது.

அத்துடன் உலக தபால் தினம் 2025 தேசிய மட்டத்தில் எஸ்.பிரதீப் முதலாம் இடத்தைப் பெற்றிருந்தார். அத்துடன் தேசிய தீபாவளி தபாலுறை சித்திர போட்டி - 2025 இல் ஜுவராசா லபிக்ஷன் தேசிய மட்டத்தில் முதலிடத்தை பெற்றிருந்தார். அதே போன்று தேசிய மட்ட தமிழ் தின போட்டியில் வில்லுப்பாட்டு போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்ற ஜெயானந்தன் தட்சகன், கிருபாகரன் யுதீஸ், ஜீவரெட்ணம் கவிஷ்யன், றொஷாந்த் டானியேல் மிறோன், வனராஜா ஹரிஷான், சசிகரன் தட்ஷிகரன், ரவிச்சந்திரன் சரன் என்போரும் இதன்போது பாராட்டி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

குறித்த போட்டி நிகழ்வுகளுக்கு மாணவர்களை பயிற்சியளித்து நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும், அவர்களுக்கு ஊக்குவிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர். இந்நிகழ்வில் கல்முனை கல்வி வலய நிர்வாக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments: