News Just In

10/31/2025 09:04:00 AM

பரபரப்பாகும் பிள்ளையான் விவகாரம்..! இன்று விசாரணைக்கு வரும் வழக்கு

பரபரப்பாகும் பிள்ளையான் விவகாரம்..! இன்று விசாரணைக்கு வரும் வழக்கு



பிள்ளையான் என்றழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமைகள் மீறல் தொடர்பான எழுத்தாணை உத்தரவு மனு மீதான விசாரணை இன்றைய தினம் நடைபெற உள்ளது.

இதன் நிமித்தம் பிள்ளையானின் சட்டத்தரணியான முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று பிள்ளையானை சந்தித்தார். இதன்போது வழக்கு தொடர்பாக அவருடன் கலந்துரையாடினார் என்று உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று அரசாங்கம் தெரிவித்து வருகிறது.

எனினும் 2006 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.

இவ்வாறு காணமல் போயிருக்கும் பேராசிரியர் யார் என்பது கூட பிள்ளையானுக்கு தெரியாது என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையில் எவ்வித அடிப்படையும் இல்லை எனவும் இதனூடாக தனது உரிமை மீறப்பட்டுள்ளது என்று அறிவித்து உத்தரவிடுமாறு கோரி பிள்ளையான் தாக்கல் செய்த எழுத்தாணை மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பிள்ளையான் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: