News Just In

10/30/2025 07:22:00 AM

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு மாணவர்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு மாணவர்களுக்கான தளபாடங்கள் வழங்கி வைப்பு

நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கு மாணவர்களுக்கான தளபாடங்களை இந்திய உதவித் திட்டத்தின் கீழ் வழங்கிய நிகழ்வு இன்று (29.10.2025) நிந்தவூர் கமு/கமு/ அல் மஸ்ஹர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான எம்.ஏ. அஸ்ரப் தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது பாரியார் சகிதம் கலந்து கொண்டார்.

மேலும் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் கௌரவ அதிதியாகவும், சிறப்பு அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.சாஜித், நிந்தவூர் கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.எல்.எம். முதர்ரிஸ், அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையின் அதிபர், மற்றும் தளபாட உதவி பெறும் கல்முனை கல்வி வலய பாடசாலை அதிபர்களும் கலந்து கொண்டனர்

No comments: