News Just In

10/24/2025 12:28:00 PM

கெஹல்பத்தர பத்மேவிற்கு ஆபாச காணொளி அனுப்பிய பிரபல நடிகை!

கெஹல்பத்தர பத்மேவிற்கு ஆபாச காணொளி அனுப்பிய பிரபல நடிகை!



அண்மையில் கைது செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மேவிற்கு பிரபல நடிகை ஒருவர் ஆபாச காணொளி ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசியை விசாரணைக்கு உட்படுத்திய போது இந்த தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த கையடக்க தொலைபேசியில் இலங்கையின் பிரபல ஐந்து நடிகைகள் தொடர்பிலான தகவல்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மிஸ் ஸ்ரீலங்கா பட்டம் வென்ற பிரபல மாடல் அழகி ஒருவரும் மற்றும் ஐந்து பிரபல நடிகைகள் குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரபல நடிகை ஒருவர் தனது காதலருடன் நெருக்கமாக இருந்த காணொளியை, பத்மேவிற்கு அனுப்பி வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வெளிநாடுகளில் வைத்து பிரபல நடிகைகள் பலர் கெஹல்பத்தர பத்மேவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளதாகவும் அது தொடர்பான புகைப்படங்கள் கெஹல்பத்தர பத்மேவின் தொலைபேசியில் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவல்களின் அடிப்படையில் குறித்த நடிகைகளிடம் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணை முன்னெடுக்க உள்ளனர்.

விரைவில் இந்த நடிகைகளிடம் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. கெஹல்பத்தர பத்தேம குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: