News Just In

10/30/2025 03:50:00 PM

ஒரு வீத வரி சுற்றுலா விடுதிகளுக்கு அமுல்படுத்தப்பட்டது - வாழைச்சேனை பிரதேச அபிவிருத்திக்கு குழு கூட்டம்

ஒரு  வீத வரி சுற்றுலா விடுதிகளுக்கு அமுல்படுத்தப்பட்டது - வாழைச்சேனை பிரதேச அபிவிருத்திக்கு குழு கூட்டம்  R Shanakiyan


இன்றையதினம் 30.10.2025 வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக்கு குழு கூட்டமானது வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதன்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. அதில் முக்கியமாக.

பாசிக்குடா பகுதியில் இராணுவத்தினால் எந்தவித அனுமதியும் இன்றி இயங்கி வரும் வியாபார நிலையத்தினால் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றமையை இன்றைய அபிவிருத்தி குழு கூட்டத்தின் என்னால் கவனத்தில் கொண்டு வரப்பட்டது. அதற்கமைய அனுமதி இன்றி இயங்கும் வியாபார நிலையத்தை அப்பகுதி மக்களுக்கு வழங்கும்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதான நிதியீட்டல் மூலமான சுற்றுலா விடுதிகளை ஒழுங்குபடுத்தும் செயற்திட்டம் மூலம் சுற்றுலா விடுதி களுக்கான வரி அறவீடுகள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டு ஒரு வீதம் வரி அமுல்படுத்தப்பட்டது

கிண்ணையடி சுங்காங்கேணி பகுதியைச் சேர்ந்த முதியோர் கொடுப்பனவை பெறுபவர்கள் இதுவரை காலமும் சிரமத்தின் மத்தியில் தங்களுடைய கொடுப்பனவை வாழைச்சேனை சென்று பெற்று வந்தார்கள் அவர்கள் தங்களுடைய கிராமங்களில் கொடுப்பனங்களை பெற்றுக் கொள்வதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கிண்ணையடி மில்லர் விளையாட்டு கழக மைதான காணிக்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் படியும் ஒன்றினை முன்வைத்திருந்தேன்.

No comments: