(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
அக் ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வாழ்வாதார வலுப்படுத்தல் திட்டத்தின் கீழ், முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் தொழிற் பயிற்சி சேவை வழங்குநர்களுடன் பரஸ்பர கலந்தரையாடல் இடம்பெற்று வருவதாக அக் ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் இளைஞர்களுக்கான நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.
புதுக்டியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச உதவிச் செயலாளர் கே. டென்சியா தலைமையில் அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தின் இளைஞர்களுக்கான நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர் அனுலாவின் இணைப்பாக்கத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் அரச மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்களின் பங்கேற்பை உறுதி செய்து, அங்கு கிடைக்கக்கூடிய சேவைகளைப் புரிந்துகொள்வதுடன், எதிர்காலத்தில் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
அத்துடன் இளைஞர்களை இத்தகைய தொழிற் பயிற்சி நிறுவனங்களுடன் இணைக்கும் முயற்சிகள் பற்றியும், இளைஞர்களின் தொழிற் கல்வியை சமூக மட்டத்தில் வலுப்படுத்த தேவையான எதிர்கால நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் மாவட்டத்தில் இயங்கும் அரச மற்றும் அரச சார்பற்ற தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்களிலிருந்து தொழில் வழிகாட்டல் அலுவலர்களும் பிரதிநிதிகளுமாக சுமார் 25 இற்கு மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்

No comments: