மட்டக்களப்பு வெபர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தைகொண்டோ சுற்றுப்போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடி 2022ம் ஆண்டு கல்முனை ஸாஹிரா கல்லூரி வைத்த சாதனையை (41 புள்ளிகள்) கடந்த 2023ம் ஆண்டு முறியடித்து (42 புள்ளிகள்) 2024ம் ஆண்டு இந்த பாடசாலை வைத்த சாதனையை (48 புள்ளிகள்) மீண்டும் இவ்வருடம் 2025ம் ஆண்டு முறியடித்து ஆண்களுக்கான சாம்பியன் (49 புள்ளிகள்) ஆக தெரிவு செய்யப்பட்டு கல்முனை ஸாஹிரா கல்லூரியின் மீண்டும் பெருமை சேர்த்துள்ளனர்.
அதில் 6 முதலிடங்கள், 6 இரண்டாம் இடங்கள், 7 மூன்றாம் இடங்கள் அடங்களாக மொத்தம் 19 பதக்கங்களை பெற்றனர். அத்துடன் 12 வீரர்கள் தேசிய போட்டிக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் அடைவிற்காக உறுதுணையாய் இருந்து மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஆலோசனைகளையும் வழங்கிய கல்லூரி முதல்வர் எம்.ஐ. ஜாபீர் அவர்களுக்கும், இணைப்பாடவிதானத்திற்குப் பொறுப்பான பிரதி அதிபர் ஏ.எல்.எம். தன்ஸீல், பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி நெறிப்படுத்திய பாடசாலையின் ஆசிரியர் மற்றும் பிரதம பயிற்றுவிப்பாளர் யூ.எல்.எம். இப்ராஹிம் மற்றும் உதவி பயிற்றுவிப்பாளர்கள் ஜே.ஏ. சுமைத், ஏ.ஏ. ஹமீம், ஏ.ஏ. ஹம்தான், ஏ.ஏ. ஷிஹாப், எம்.எச்.ஏ. ஹஸீன் மற்றும் போட்டிகளில் பங்கேற்று தமது உச்ச திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து, போட்டிகளில் பங்கேற்க ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளது
No comments: