வாகரை பிரதேசத்தில் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் சமூக ஆர்வலர்களும், பாடசாலை பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எதிர்வரும் காலங்களில் கல்விப் பொது சாதாரண தரத்தில் பரீட்சை எழுதும் பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும், கட்டுமுறிவு வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களும் மேலதிக வகுப்பு ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று பால்ச்சேனை தமிழ் மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் த.உதயகுமார் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆயித்தியமலை பாடசாலையின் அதிபர் து.வித்தியானந்தன், கட்டுமுறிவு பாடசாலையின் அதிபர் ஜீ.ஜீவனேஸ்வரன், ஆசிரியர் க.நாகேந்திரன், மேலதிக வகுப்பில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான துலக்சன், ஜெயக்காந், காந்தன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: