கல்முனை கல்வி வலய கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான நவீன முறையில் கற்றல் செயல்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ளுதல் என்பது தொடர்பான கருத்தரங்கு அதிபர் ஏ. ஜீ.எம். றிஷாத் அவர்களின் தலைமையில் 2025.08.19ம் திகதி நடைபெற்றது.
உலக வங்கியின்"Gem project"திட்டத்தின் கீழ் நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கு வளவாளராக, கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் ஆங்கில பாட இணைப்பாளர் திரு. ஏ.எல்.எம். ஆரிப் அவர்கள் கலந்து கொண்டார்.
தற்காலத்தில் மாணவர்கள் எவ்வாறு நவீன முறையிலான கற்றல்களுக்கு முகம் கொடுக்க வேண்டும், அவற்றிற்கு பயன் படுத்தக்கூடிய மென்பொருள் செயலிகள், மற்றும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் போன்றவைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான விளக்கங்களையும் செயன்முறை மூலம் மாணவர்களுக்கு விளக்கினார்.
மேலும் நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர் மௌலவி எம்.ரீ.ஏ.முனாப் , மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
No comments: