News Just In

8/14/2025 12:46:00 PM

சாகித்திய விருது பெற்ற "பரசுராம பூமி" சிறுகதைத் தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் வெளியீடு!

சாகித்திய விருது பெற்ற "பரசுராம பூமி" சிறுகதைத் தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் வெளியீடு!


அபு அலா
கிழக்கு மாகாண சாகித்திய விருது பெற்ற வி.மைக்கல் கொலினின் "பரசுராம பூமி" சிறுகதைத் தொகுப்பு நூலை பிரபல எழுத்தாளர் இலண்டன் மு.தயாளனின் ஆங்கில மொழிபெயர்ப்பில்
"THE LAND OF PARASHURAMA" என்ற தலைப்பில் amazon இல் நேற்று முன்தினம் (12) வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

முழுமையாக தொன்மங்களையும்,மறைநூல்களையும் உள்ளடக்கியதொரு சிறுகதைத் தொகுப்பு நூலாக உள்ளதால், பலரையும் மறு வாசிப்புக்குட்படுத்திய தமிழின் முதல் சிறுகதைத் தொகுப்பாகவும் இது அமைந்துள்ளது.

ஈழத்தமிழ் இலக்கியத்தில் முதன்முதலாகக் கருதப்படும் இந்த தொகுப்பு சிறுகதை நூலில், நவீன போராட்டங்களின் பார்வையில் பண்டைய கருப்பொருள்களை தைரியமாக மறுவிசாரணை செய்கிறது என்று சொல்லுமளவுக்கும், புராணம் மற்றும் வரலாற்றின் காலத்தால் அழியாத அதிர்வுகளையும் சுட்டிக்காட்டுகிறது.

அதிலுள்ள ஒவ்வொரு கதையும் பழங்கால சின்னங்களுக்கு புதிய உயிரை ஊட்டுகிறது. அத்துடன் கடந்த நூற்றாண்டுகளில் இருந்ததைப் போன்றே, இன்றும் பொருத்தமான விளக்கங்களை இந்நூல் வழங்குகிறது. அதன் குரல், மனநிலை மற்றும் தார்மீக விசாரணையைக் கொண்டுள்ளதுடன், தொகுப்பாசிரியரின் பாரம்பரியம் மற்றும் சமகால உலகம் பற்றிய ஆழமான புரிதலையே அது காட்டுகிறது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பல நூல்களை எழுதிய பிரபல எழுத்தாளர் இலண்டன் மு.தயாளன் அவர்களினால் "பரசுராம பூமி" சிறுகதைத் தொகுப்பு நூல் மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு ஆங்கில மொழிபெயர்ப்பில் "THE LAND OF PARASHURAMA" என்ற தலைப்பில் amazon இல் வெளியீடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: