News Just In

7/28/2025 12:47:00 PM

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; கனரக வாகனம் பல வாகனங்களுடன் மோதியது

இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து; கனரக வாகனம் பல வாகனங்களுடன் மோதியது



பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் (Bucket truck) ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



விபத்தில் உயிரிழந்தவர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார். விபத்துக்கு காரணமான கிரேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, கிரேன் வாகனத்தில் பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: