News Just In

7/28/2025 05:57:00 PM

முன்னாள் கடற்படைத் தளபதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் அதிரடி கைது

முன்னாள் கடற்படைத் தளபதி குற்றப் புலனாய்வுத் துறையினரால் அதிரடி கைது



முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையினரால் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளா

பொத்துஹெர பகுதியில் நடந்த ஒரு கடத்தல் தொடர்பான விசாரணையுடன் இந்த கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் அவர் கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில் நடந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையின் 24ஆவது தளபதியாக அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஜூலை 15, 2020 அன்று பதவியேற்றார்.

டிசம்பர் 18, 2022 அன்று தனது பதவிக்காலம் முடிந்ததும் அவர் இலங்கை கடற்படையின் தளபதி பதவியில் இருந்து விலகினார்.

No comments: