நூருல் ஹுதா உமர்
பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிக்கும் நோக்குடன் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலம்பெயர் தகவல் நிலையமும் சர்வதேச குடியேற்றக் கொள்கை மேம்பாட்டுக்கான நிலையத்துடன் இணைந்து தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களை மையப்படுத்தி “பாதுகாப்பான குடியேற்றத்திற்கான இளைஞர் விழிப்புணர்வு நிகழ்வு” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்த செயலமர்வு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர் கூடத்தில் (22) இடம்பெற்றது.
உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீனின் அனுமதியுடன் தொழில் வழிகாட்டல் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி எம்.பி.எம்.இர்ஷாட்டின் வழிகாட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு வளவாளர்களாக நிகழ்ச்சி இணைப்பாளர் சாமீர் சாலிக், ஆலோசகர் சரத் பல்லேகல மற்றும் ஆலோசகர் சுமித்ரா சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிக்கும் நோக்குடன், குடிவரவு தகவல் நிலையம் ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது. இது வெளிநாட்டு வேலை வாய்ப்புகள், மற்றும் தேவைகளுக்கு புறப்படுவதற்கு முன்னான தயாரிப்புகள், மனிதக் கடத்தல் மற்றும் தவறான குடிவரவினைத் தவிர்க்கும் வழிகள் குறித்த நம்பகமான, புதுப்பிக்கப்பட்ட மற்றும் தொடர்புடைய தகவல்களை வழங்குகிறது.
இந்த நிகழ்வு, வெளிநாட்டில் வேலைவாய்பை நாடும் இளைஞர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களுக்கு பாதுகாப்பான, ஒழுங்கான மற்றும் முறையான குடியேற்றம் குறித்த அறிவைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் பல்வேறு நிபுணர்கள் இதில் பங்கேற்று முக்கியமான விடயங்களை விளக்கினர். இந்நிகழ்வில் அனைத்து பீடங்களில் இருந்தும் 300க்கும் அதிகமான மூன்றாம் நான்காம் ஆண்டு மாணவர்கள் பங்கு பெற்றிருந்தனர்.
நிகழ்வின்போது தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டி பிரிவின் ஆலோசகர்களான எல்.ரீ. எம். இயாஸ் மற்றும் ஏ. பாறூக் உள்ளிட்ட பலரும் பங்கு கொண்டிருந்தனர்

No comments: