News Just In

7/13/2025 04:18:00 PM

செம்மணி இரகசியத்தை வெளிப்படுத்திய இராணுவ அதிகாரி! புதையுண்டு கிடக்கும் 400 மனித எச்சங்கள்

செம்மணி இரகசியத்தை வெளிப்படுத்திய இராணுவ அதிகாரி! புதையுண்டு கிடக்கும் 400 மனித எச்சங்கள்



செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) மற்றும் அதன் மனித உரிமைகள் தொடர்பான அமைப்புகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ஆனால் இது முறையாகவும் முழுமையாகவும் சர்வதேச நீதிமன்றம் அல்லது ஐ.நாவின் உயர்மட்ட விசாரணைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக உறுதியான தகவல்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் 1998இல் இலங்கை முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்சவால் முதலில் வெளிப்படுத்தப்பட்டது. இவர், யாழ்ப்பாணத்தில் 1995-1996 காலகட்டத்தில் காணாமல் போன நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டு செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.

இதில் 300-400 உடல்கள் இருக்கலாம் எனவும் கூறப்பட்டது. 1999இல் நடந்த அகழ்வாய்வில் 15 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன, இதில் இருவர் 1996இல் காணாமல் போனவர்கள் என அடையாளம் காணப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை அரசு, இந்த விவகாரத்தில் நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறியுள்ளது. ஆனால் இது உண்மையான பொறுப்புக்கூறலுக்கு வழிவகுக்குமா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளதாக இலங்கையின் மூத்த ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், சோமரத்ன ராஜபக்ச தான் 400  உடல்களை  கொன்று புதைத்ததாக வெளிப்படுத்திய கருத்தே இன்று செம்மணியை உலகம் அறிய காரணமாகியுள்ளது எனவும் கூறியுள்ளார்.

No comments: