News Just In

12/02/2025 11:12:00 AM

வெள்ள நிவாரண உதவியாக பாக்கிஸ்தானால் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களில், உபயோக காலாவதியான (Expired) பொருட்கள்

வெள்ள நிவாரண உதவியாக பாக்கிஸ்தானால் அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களில், உபயோக காலாவதியான (Expired) பொருட்கள் 


 வெள்ள நிவாரண உதவியாக அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களில், உபயோக காலாவதியான (Expired) பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது உணவுப் பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.

​ இலங்கைக்கு நிவாரணப் பொருட்களுடன் அனுப்பப்பட்ட மஞ்சள் நிற ‘ஷிலா’ (Shila) பைகளில், பால் பவுடர் மற்றும் மாவு போன்ற உணவுப் பொருட்கள் இருந்துள்ளன.இந்தப் பைகளில், "பாக்கிஸ்தான் இலங்கையுடன் துணை நிற்கிறது" என்று பெருமையுடன் முத்திரையிடப்பட்டிருந்த போதிலும், உள்ளே இருந்த பால் பவுடர் மற்றும் மாவு ஆகியவற்றில் 'EXP 10/2024' (அதாவது அக்டோபர் 2024 இல் காலாவதி) எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
​2025 ஆம் ஆண்டின் இறுதியில் நிவாரணப் பொருட்களில், ஒரு வருடத்திற்கும் மேலாக காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பியது குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது, பாகிஸ்தானின் உதவி அணுகுமுறையின் தரம் மற்றும் அக்கறையின்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
இ/மு












No comments: