News Just In

12/02/2025 11:02:00 AM

10 ஆயிரம் ரூபா முற்பணம் - மக்களுக்கு அரசின் முக்கிய செய்தி!

10 ஆயிரம் ரூபா முற்பணம் - மக்களுக்கு அரசின் முக்கிய செய்தி



இடம் பெயர்ந்த மக்கள் தம் வீடுகளை துப்புரவு செய்ய 10 ஆயிரம் ரூபா முற்பணமாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரிவித்துள்ளார்.

“நாடு முழுவதையும் பாதித்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களை பேரழிவு தணிந்தவுடன் அவர்களின் வீடுகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென்றாலும் அந்த வீடுகள் வாழக்கூடிய சுகாதாரத் தரமான நிலையில் இல்லாதமையால் அவ்வாறு திரும்புவது சிக்கலாக இருக்கும்.

எனவே அந்த வீடுகளை விரைவில் சுத்தம் செய்து வாழக்கூடிய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும்இதற்காக ஒவ்வொரு வீட்டுக்கும் 10 ஆயிரம் ரூபாய் முற்பணம் வழங்க வேண்டும்.

தற்போது நிலவும் பரவலான பேரிடர் சூழ்நிலை காரணமாக வெள்ளம், மரங்கள் விழுதல் அல்லது பிற பேரிடர்கள் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சேறு, மண், குப்பைகள் குவிந்து வாழத் தகுதியற்றதாகி விட்ட தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்து மீட்டெடுக்க இந்த முற்பணத்தை உடனடியாக வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிலத்தின் உரிமையை பொருட்படுத்தாமல் தோட்ட வீடுகள் உட்படப் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் அது வழங்கப்பட வேண்டும் என சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: